கிட்னி புரோக்கர் (சிறுகதை)


வெறகடுப்பில் தீய்ந்து போன சட்டியைப் போல, வெயில் சூட்டில் கருத்துப் போன முகம். மழை   பெய்யாத வன்னிக் காட்டு இலைகளைப் போல், எண்ணெய் தடவாததால், பழுப்பேறிப் போன முடி. கடுமை இருந்தாலும், கள்ளத்தனம் இல்லாத பார்வை. மெலிந்தாலும், பலமுள்ள தேகம். பயாஸுக்கு அடையாளம் சொல்வதென்றால், இப்படித்தான் சொல்ல வேண்டும்.

இந்த பிஸ்னஸ் டீலிங்கில் ஸுபைர் காக்கா முதலில் பயாஸை சந்தித்தது மிகவும் வித்தியாசமான நிகழ்வு. எத்தனையோ பிஸ்னஸ் செய்திருக்கிறார். அவருடைய இருபத்திரண்டு வருட புரோகர் சர்விஸில் அவர் பேசாத கல்யாணமுமில்லை. பார்க்காத பிஸ்னஸும் இல்லை. முச்சந்திக்கு முன்னாலுள்ள மூனேக்கர் காணியை மூனா கானாவுக்கு பேசியதும் அவர்தான். ஆனால், கடைசி மட்டும், கிட்னி பிஸ்னஸ் என்டா அவர் பார்த்ததே இல்லை.

Share

எட்டுப் பேச்சர்ஸ் காணி.....

ஹஸ்ஸான் ஹாஜியார் வீட்டு நுழைவாயில்.
பஸ்லுர் றஹ்மானின் தொண்டைக் குழி உலர்ந்து விட்டது. மிகவும் சிரமப்பட்டு கால்களை வைத்து நடந்தான். திடீரென்று புவியீர்ப்பு விசை குறைந்து விட்டது மாதிரி உணர்வு அவனுக்கு.

உள்ளே போய் ஹஸ்ஸான் ஹாஜியாரை சந்திப்பதா, வேண்டாமா என்று அவனது மனது பல முறை போராட்டம் நடாத்தியது. ஏதோ ஒரு தயக்கம் அவனைப் பின்னோக்கி இழுத்தாலும், மனைவி, பிள்ளைகள், உம்மா, வாப்பா, திருமண வயதில் இருக்கும் தங்கச்சி அனைவரதும் முகங்கள் அவன் மனக்கண் முன் தோன்றி, அவனை முன் நோக்கித் தள்ளின.

முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹஸ்ஸான் ஹாஜியாரின் நவீன ரக மொன்டரோ அவனைப் பயமுறுத்தியது. பைனஸ் மரங்கள் ஆடி, அசைந்து அவனை எள்ளி நகையாடின. அங்கு பூத்துக் குழுங்கிய ரோஜாக்கள் கூட முள்ளாய்க் குத்துவதாய்த் தோன்றியது.

'நான் என்ன பிச்சையா கேட்டு வந்திருக்கிறன்?' பஸூல் தன்னை தைரியப்படுத்திக் கொண்டான்.
Share

'நீங்க என்னோட எரக்கமில்ல....'

அந்த அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்குகிறது. தொலைபேசியும், மொபைல் போன்களும் சிணுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் ஆங்காங்கே காரசாரமாக உரையாடல்களும், வியாபாரப் பேச்சுக்களும். ரிஹாம் கம்பூட்டரிலும், தொலைபேசியிலும் பம்பரமாக சுழல்கிறான். 

நின்று வீண் அரட்டை அடிப்பதற்கு நேரமே இல்லை. அதனால்தானோ என்னவோ, இது போன்ற முதல்தரக் கம்பனிகளை விஞ்சுவதற்கு நாட்டின் மற்ற நிறுவனங்களால் இயலவில்லை.  இங்கெல்லாம், ஒரு சிறு தவறும் செய்ய முடியாதளவு இருக்கமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது கம்பனியின் உள்ளகக் கட்டமைப்பு. வெளியில் இருப்பவர்களுக்கு இது சுவர்க்க பூமி. யதார்த்தத்தில் அவை உலகிலேயே சமைக்கப்பட்ட நரகங்கள். கௌரவான சிறைக் கூடங்கள்.
Share

Search

About Me

My photo
Kandy, Sri Lanka
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...