துப்பாக்கி ரவைகள்


துப்பாக்கி ரவைகளாய் மறுப்புக்களும்
ஏற்கப்படாமைகளும்...
இதயச் சுவரில் வடுக்களை
ஓவியமாக்கியிருக்கின்றன...
Share

நிபந்தனை இல்லை...!


அன்று வெயில் கடினமாக இருந்ததுமார்ச் மாதத்து மிகவும் உஷ்னமான வெயில் அதுமைதானமெங்கும் கல்லூரி மாணவர்கள் சிதறிக்கிடந்தார்கள்அவர்கள் அந்த பாடசாலையில்சில நாட்களில் நடைபெற இருக்கும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் பயிற்சிக்காகக் கூடியவர்கள்

மைதானத்தில் இருந்து யூசுப் மிகவும் வாடிய முகத்துடன் வந்து கொண்டிருந்தான்அவனது முகத்தில் மகிழ்ச்சி இல்லைகவலையும்,வேர்வையும் அவனது முகத்தில் குடி கொண்டிருந்தனஅன்று பயிற்சி நேரத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலருடன் ஏற்பட்ட மனக்கசப்புத்தான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும்அத்தோடு இன்று அவனது விளையாட்டு அடைவிலும் அவனுக்கு திருப்தியில்லை

சின்ன வயதில் இருந்தே விளையாட்டில் மிகவும் சீரியசானவன் அவன்.இம்முறையும் எப்படியும் சில சாதனைகளை செய்து விட வேண்டும்.வலய மட்டம்மாகாண மட்டம்அகில இலங்கை மட்டம் வரை செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்ததுயாரிடமும் சொல்லா விட்டாலும், ஒலிம்பிக்கில் கலந்து பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆவல் கூட அவனுக்கு இலேசாக இருக்கத்தான் செய்தது

Share

மெழுகுவர்த்தி...!


நட்சத்திரங்கள் துயில் கொள்ள செல்லும் சாமத்து ராத்திரி...
ஐந்தாவது முறையாகவும் தன் நண்பிக்கு எழுதிய காயிதத்தை சரி பார்க்கிறாள் ருஷ்தா.

"எனதருமை தோழிக்கு... உன் கடிதம் கிடைத்தது... வாழ்வின்  வசந்தமான  திருமண  வாழ்வில்  நீ நுழையப்போகிறாய்... திருமணம் என்பது மார்க்கத்தில் பாதி என்று சொல்வார்கள். .. மரணம் மட்டும், அதற்குப் பின் சுவனத்திலும் உங்கள் காதலும், உறவும் தொடரட்டும் என பிரார்த்திக்கிறேன்.... " - வஸ்ஸலாம், உனதருமை நண்பி ருஷ்தா.

Share

Search

About Me

My photo
Kandy, Sri Lanka
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...