துப்பாக்கி ரவைகளாய் மறுப்புக்களும்
ஏற்கப்படாமைகளும்...
இதயச் சுவரில் வடுக்களை
ஓவியமாக்கியிருக்கின்றன...
என் சுயம் அளக்கப்படுகையிலும்
அந்நிய மொழியில் என் கவிதைக்கு
வியாக்கியானம்
சொல்லப்படும் போதும்
நான் 'நானாக” இருத்தலுக்காகவே
அனுமது பெற வேண்டியதாகிறது...
வாழ்த்த மறந்த வழியனுப்புதல்களுக்கும்
‘'என் செய்ய” என்ற படியான
வரவேற்புக்களுக்கும்
பழக்கப்பட்டாயிற்று மனசு...
நாளைகளை மறந்து நிகழ்காலத்தில்
மூழ்கிய மனிதர்கள்
முற்களைப் பலித்துக் கொண்டே
ரோஜாவைத் தேடி அழைகிறார்கள்
என் செய்ய?
இதயத்தில் தைத்த ரவைகளின்
வலியோடும்
புன்னகை புரிகின்றேன்....
நாய்கள் குறைப்பதால் என் நிறத்தை
மாற்றிக்கொள்வதற்கு
நான் ஒன்றும் அரசியல் வாதியில்லையே?
Share


0 comments:
Post a Comment